English தமிழ்
1 A la carte தெரிவு உணவு வகை
2 A path of democracy ஜனநாயகப் பாதை
3 Abacus மணிச்சட்டம்
4 Abandoned children கைவிடப்பட்ட குழந்தைகள்
5 Abortion rate கருக்கலைப்பு விகிதம்
6 Above-average chance சராசரிக்கு மேற்பட்ட வாய்ப்பு
7 Absolute monarchy முழுமையான முடியாட்சி
8 Abusive act முறைகேடான செயல் / துன்புறுத்தும் செயல்
9 Academic performance கல்விச் செயல்திறன்
10 Accomplice in crime குற்ற உடந்தையாளர்
11 Accountant கணக்காளர்
12 Accounting Standards Council கணக்கியல் தர நிர்ணய மன்றம்
13 Acid test முக்கியச் சோதனை
14 Acrophobia உயரத்தைக் கண்டு பயப்படுதல்
15 Acting Minister தற்காலிக அமைச்சர்
16 Active ageing துடிப்பான முதுமை
17 Active participation துடிப்பான பங்கேற்பு
18 Acute care தீவிர சுகாதாரக் கவனிப்பு
19 Acute hospital குறுகிய கால / தீவிர கவனிப்பு மருத்துவமனை
20 Acute respiratory infection கடுமையான சுவாச நோய்
21 Additional assistance கூடுதல் உதவி
22 Additional tax கூடுதல் வரி
23 Adhoc நிலைமைக்கேற்ற / தற்காலிக
24 Administrative capital நிர்வாகத் தலைநகரம்
25 Admission criteria நுழைவுத் தகுதி / சேர்க்கைத் தகுதி
26 Adoption programme தத்தெடுப்புத் திட்டம்
27 Advance Medical Directive (AMD) முன் மருத்துவ உத்தரவு
28 Advanced practice nurses மூத்த செயல்முறைத் தாதியர்
29 Adventure club வீரதீரச்செயல் மன்றம்
30 Adventure sports வீரதீர விளையாட்டு
31 Advisory panel ஆலோசனைக் குழு
32 Affordable fees கட்டுப்படியான கட்டணங்கள்
33 Aftercare  பின்னலச் சேவை
34 Aftershocks (earthquake) நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள்
35 Age-appropriate வயதுக்கு உகந்த
36 Ageing issues முதுமை சார்ந்த பிரச்சினைகள்
37 Ageing population மூப்படையும் மக்கள் தொகை
38 Agenda நிகழ்ச்சி நிரல் / திட்டம்
39 Aggression ஆக்கிரமிப்பு
40 Agri-Food & Veterinary Authority  வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம்
41 Agrotechnology வேளாண்மைத் தொழில்நுட்பம்
42 Agro-tourism வேளாண்மை சார்ந்த பயணத் துறை
43 Aid agency உதவி அமைப்பு
44 Aid organisations உதவி நிறுவனங்கள்
45 Aide-de-camp (ADC) அதிகாரத்துவ ராணுவ உதவியாளர் 
46 AIDS (Acquired Immuno-Deficiency Syndrome) தடுப்புச் சக்தி இழப்பு நோய்
47 Air crew விமான ஊழியர்கள் / சிப்பந்திகள்
48 Air marshal விமானப் படைத் தளபதி
49 Air strike ஆகாயத் தாக்குதல்
50 Air Traffic Controller விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி
51 Air conditioner குளிர்சாதனப் பெட்டி
52 Aircraft carrier விமானந்தாங்கிக் கப்பல்
53 Airport terminal விமான முனையம்
54 Allergy ஒவ்வாமை
55 Alliance கூட்டணி
56 Allied nations நட்பு நாடுகள்
57 Alternative policies மாற்றுக் கொள்கைகள்
58 Altimeter உயரமானி (உயரத்தை அளக்கும் கருவி)
59 Alumni முன்னாள் மாணவர்கள்
60 Amalgamated Union of Public Employees (AUPE) அரசாங்க ஊழியர் இணைப்புச் சங்கம்
61 Ambassador-at-Large பொதுத் தூதர்
62 Amicable solution சுமுகத் தீர்வு
63 Anaemia இரத்தச் சோகை
64 Anarchic situation குழப்பமான சூழல் / நிலை
65 Animation உயிரோவியம்
66 Animosity பகைமை / கடும் வெறுப்பு
67 Annual variable component வருடாந்தர மாறுவிகித அம்சம்
68 Annual wage supplement வருடாந்தரக் கூடுதல் சம்பளம்
69 Antenatal screening மகப்பேற்றுக்கு முந்திய பரிசோதனை
70 antenna வானலை வாங்கி
71 Anti-Corruption Agency (ACA) ஊழல் தடுப்புப் பிரிவு
72 Anti-submarine ship நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல்
73 Anti-ageing treatment மூப்பு எதிர்ப்பு சிகிச்சை 
74 Antibiotics கிருமி எதிர்ப்பு மருந்து
75 Anti-piracy software போலித் தடுப்பு மென்பொருள்
76 Anti-Secession Law பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம்
77 Antiseptic கிருமிப் பரவல் தடுப்பு மருந்து
78 Anti-subversion கீழறுப்புத் தடுப்பு
79 Anti-terror pact பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம்
80 Anti-terrorism act பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
81 Anti-terrorism strategy பயங்கரவாத எதிர்ப்பு உத்தி
82 Anti-terrorist campaign பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம்
83 Anti-war protestors போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்
84 Anxiety மனக்கவலை / பதற்றம்
85 Applied science பயன்முறை அறிவியல்
86 Apprentice வேலைப் பயிற்சி பெறுபவர்
87 Apprenticeship Scheme வேலைப் பயிற்சித் திட்டம்
88 Approach of teaching கற்பித்தல் அணுகுமுறை
89 Aptitude test திறன் சோதனை
90 Arbitration committee நடுவர் மன்றக் குழு
91 Archaeologist தொல்பொருள் ஆய்வாளர்
92 Architectural technology கட்டடக் கலைத் தொழில்நுட்பம்
93 Armed group ஆயுதமேந்திய குழு
94 Armour headquarters கவச வாகனப் படைத் தலைமையகம்
95 Armour piercing rocket கவச வாகனங்களைத் துளைக்கும் எறிபடை
96 Armoured vehicle கவச வாகனம்
97 Arms dealing ஆயுத வர்த்தகம்
98 Arms inspector ஆயுதக் கண்காணிப்பாளர்
99 Arson attack தீவைப்புத் தாக்குதல்
100 Artefacts / artifacts கலைப் பொருட்கள்
101 Arthritis மூட்டுவாதம்
102 Artificial intelligence செயற்கை நுண்ணறிவு
103 Artificial limbs செயற்கைக் கை, கால்கள்
104 Artificial sweetener செயற்கை இனிப்பூட்டி
105 Artillery duel பீரங்கிச் சண்டை
106 Arts council கலை மன்றம்
107 Arts gallery கலைக் கூடம்
108 Arts tourism கலைச் சுற்றுலா
109 Artwork கலைப் படைப்பு
110 Asian Development Bank ஆசிய வளர்ச்சி வங்கி
111 Asian Trade Promotion ஆசிய வர்த்தக மேம்பாடு
112 Assasination அரசியல் படுகொலை
113 Assessment methods மதிப்பீட்டு முறைகள்
114 Asteroid சிறு கோள்
115 Asylum seekers அடைக்கலம் நாடுவோர்
116 Asymmetric bars (gymnastics) சமமற்ற சட்டங்கள் (சீருடற் பயிற்சி)
117 Automated Teller Machine (ATM) தானியக்க வங்கி இயந்திரம்
118 Atomic power plant அணுமின் நிலையம்
119 Atomic reactor அணுஉலை
120 Atomic watchdog அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு
121 Attack on democracy ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
122 Attorney-General அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி
123 Audacious campaign (election) துணிகரப் பிரசாரம்
124 Audio visual aids ஒலி ஒளிச் சாதனங்கள்
125 Auditor கணக்காய்வாளர்
126 Authorisation உரிமையளித்தல்
127 Autism  தொடர்புத் திறன் குறைபாடு
128 Auto-saving system தானியக்கச் சேமிப்பு முறை
129 Automatic application தானியக்கப் பயன்முறை
130 Automatic car தானியக்க இயந்திர வாகனம்
131 Autonomous Schools தன்னாட்சிப் பள்ளிகள்
132 Auto pay parking system தானியக்க வாகன நிறுத்தக் கட்டண முறை
133 Aviary பறவைத் தோட்டம் / பண்ணை
134 Aviation policy விமானப் போக்குவரத்துக் கொள்கை
135 Aviation safety / security விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு
136 Aviation summit விமானப் போக்குவரத்துத் துறை உச்சநிலை மாநாடு